சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு விழா

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் டி.ஆர். தாமோதரனுக்கு, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.நாயகி தேவுன் கலைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், மதுரை

News image
Updated On :14 மே 2018, 9:26 pm

DIN

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் டி.ஆர். தாமோதரனுக்கு, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நாயகி தேவுன் கலைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி இல.சொ. சத்தியமூர்த்தி பங்கேற்றுப் பேசியதாவது: அறிஞர் நடனகோபால் பலமொழிகளில் புலமைப் பெற்றவர். அவருக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சௌராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய சௌராஷ்டிர பாடல்கள் பலவற்றை பிரபல பாடகர் மறைந்த டி.எம். சௌந்தரராஜன் பாடியுள்ளார். நாயகியார் தரிசனம் உள்ளிட்ட பல புத்தகங்களையும், தமிழ்-சௌராஷ்டிர மொழி அகராதியையும் உருவாக்கியுள்ளார். சௌராஷ்டிர மொழி ஆய்வு செய்பவர்களுக்கு இந்த அகராதி மிகவும் உதவியாக இருந்துள்ளது என்றார். இதில், பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன், கீதா நடன கோபால நாயகி மந்திர் தலைவர் கே.கே. சுரேந்திரநாத், பேராசிரியர் எல்.ஆர். கோவர்தனன், கேஎல்என் பொறியியல் கல்லூரி தலைவர் கே.எல்.என். கணேஷ், சௌராஷ்டிர வர்த்தக சங்க முன்னாள் தலைவர் எஸ்.கே.ஆர். ரமேஷ்பாபு, சௌராஷ்டிரா கல்லூரிச் செயலர் டி.ஆர். குமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.