ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தை கைது

அவனியாபுரத்தில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :21 மே 2018, 11:13 pm

அவனியாபுரத்தில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சுந்தரம் (45). தையல் இயந்திரம் பழுது பார்க்கும் இவருக்கு, சரவணன் (14) என்ற மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் சுந்தரத்தின் மனைவி இறந்துவிட்டார். இந் நிலையில், மனைவியின் தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், சுந்தரம் தனது மகளுக்கு சனிக்கிழமை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர், சுந்தரத்தில் மகளை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அச்சிறுமியின் புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.