தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில், கடந்த 2 ஆண்டுகளில் 6,079 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், கிராமப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமாகும்.
இதனடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், மகளிர், இளைஞர் சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்குப் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2016-17 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் மொத்தம் 11,164 பேர் பங்கேற்றனர். இவர்களில், 3,864 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, நிகழாண்டிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட முகாமில் 1,076 பேரும், வட்டார அளவில் நடத்தப்பட்ட முகாம்களில் 1,139 பேரும் பணி
நியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

