மதுரையில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சனிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மேலவாசல் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் மதுரை வீரன் (45). நாம் தமிழர் கட்சியின் கிளை பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், மதுரை வீரன் மற்றும் இவரது நண்பர் போஸ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் முத்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.அப்போது, அவ்வழியாக மானாமதுரையைச் சேர்ந்த சஞ்சீவி (42), அவரது மனைவி சண்முகப்பிரியா ஆகியோர் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது, மதுரை வீரன் ஓட்டிச்சென்ற வாகனம் மோதியுள்ளது. இதில், மதுரை வீரன், போஸ் மற்றும் சஞ்சீவி, சண்முகப்பிரியா ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
உடனே, அப்பகுதியினர் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மதுரை வீரன் உயிரிழந்தார். இது குறித்து சஞ்சீவி அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சிவகிரியில் மே தினப் பேரணி

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

