மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மனைவி மீது திராவகம் வீசிய கணவர் கைது

மதுரையில் மனைவி மீது திராவகம் வீசிய கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :12 நவம்பர் 2018, 11:32 pm


மதுரையில் மனைவி மீது திராவகம் வீசிய கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை பசும்பொன் நகர் நாச்சியார் 1-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி (29). மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது இரண்டாவது கணவர் பெருங்குடியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (39). இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, பத்மாவதி சில மாதங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பத்மாவதி வேலை செய்யும் நகைக் கடைக்கு சென்ற ஜெகதீஸ்வரன், அங்கு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஜெகதீஸ்வரன், பத்மாவதியின் முகத்தில் திராவகத்தை வீசினர்.
இதில் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயமடைந்த பத்மாவதியை அப்பகுதியினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பத்மாவதி அளித்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீஸார் வழக்குப்பதிந்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.