கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

மதுரையில் மிதமான மழை

மதுரையில்  பலத்தமழை பெய்யும் என எதிர்பார்ப்பிலிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழையே பெய்தது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:56 am IST

மதுரையில்  பலத்தமழை பெய்யும் என எதிர்பார்ப்பிலிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழையே பெய்தது.
 மதுரை மாவட்டத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சனிக்கிழமை பேரிடர் மீட்புப் படையும் மதுரைக்கு வந்தது. மேலும் கனமழை பெய்யும் என பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும் கல்வித்துறை அறிவுறுத்தியது. 
இந்நிலையில் சனிக்கிழமை, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் மதுரை மாவட்டத்தில் வழக்கமாகப் பெய்யும் மழை கூட பெய்யவில்லை. 
சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்  மதுரை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில்: குப்பணாம்பட்டி 7, வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி பங்களா 6.6, மதுரை 5, சாத்தையாறு அணைப்பகுதி 24, மேட்டுப்பட்டி 9, கள்ளந்திரி 10, சிட்டம்பட்டி 20, புலிப்பட்டி 38.2, மேலூர் 25, தனியாமங்கலம் 9, இடையபட்டி 24.6 என பதிவாகியுள்ளது.
 ஞாயிற்றுக்கிழமை காலையில் மதுரையில் பரவலாக லேசான மழை பெய்தது. பின்னர் பகலில் திடீரென சில நிமிடங்கள் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. மாலையில் தூறலாக மழை பெய்தது. பகலில் அவ்வப்போது சுள்ளென்று வெயில் கொளுத்தியது. 
மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்யாத நிலையில் குளிர்ந்த சூழலும் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.