எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கலை பண்பாட்டுத்துறை விழாவில் ஓவியக் கலைஞர்களுக்கு பரிசளிப்பு

மதுரை மாவட்ட கலை பண்பாட்டுதுறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிற்பக்கலை கண்காட்சி

Updated On :8 அக்டோபர் 2018, 8:02 am IST

மதுரை மாவட்ட கலை பண்பாட்டுதுறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிற்பக்கலை கண்காட்சி நிறைவு விழாவில் ஓவியக் கலைஞர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
 மதுரை கலைபண்பாட்டுத்துறை சார்பில் சிற்பக்கலை கண்காட்சி மற்றும் ஓவியக் கலைஞர்களுக்கான ஓவியக் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமை வகித்துப் பேசியது: கலை மற்றும் பண்பாட்டின் காலக்கண்ணாடியாக ஓவியம், சிற்பம் திகழ்கிறது. 
ஓவியம், சிற்பக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை விருதுகள் அரசால் வழங்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஆண்டு தோறும் கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுவருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளுக்கான மதுரை மாவட்ட சிறந்த ஓவியம், சிற்பக் கலைஞர்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றுகளும்  ஆட்சியரால் வழங்கப்பட்டன. விழாவில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் மு.க.சுந்தர், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.பசும்பொன், அரசு இசைக் கல்லூர் முதல்வர் சி.டேவிட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.