மதுரையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள் திருடப்பட்டதாக சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தபால்தந்தி நகர் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராமன்(62). அரசு வங்கியில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சனிக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 23 பவுன் நகைகள் திருடிச்சென்றது தெரிந்தது. சம்பவம் தொடர்பாக சுந்தர்ராமன் அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

