
திருமங்கலம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டி விலக்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதியது. இந்த விபத்தில் தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் கமல் நிகழிவிடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த கமலின் மனைவி பிரகன்யா (35), மகள் கிரிஸ்தலா (5), மகன் கிரிஸ் வன்னியராஜ் (4) ஆகியோர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் பிரகன்யா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





