
உசிலம்பட்டி அருகே புதன்கிழமை நடைபெற்ற திருமண விழாவில், மணமகன் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் விஷேச வீட்டினரை சோகமாக்கியது.
உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆனந்தகுமார்- கமலி ஆகியோருக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.
இதில், மணமகன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டி முடித்த உடன் ஆனந்தகுமாரின், தந்தை மொன்டிக்குண்டுவைச் சேர்ந்த தவசித்தேவர் (52), கீழே விழுந்தார்.உடனடியாக அவர் அருகே சென்று பார்த்தனர். அப்போது, தவசித்தேவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. மகனின் திருமணத்தின் நாள் அன்றே தந்தை இறந்ததால், திருமண நிகழ்ச்சி சோகமாக மாறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





