
மதுரையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
மதுரை செல்லூர் பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (27). இவர் வீட்டின் முன்பிருந்த மின்கம்பியில் புதன்கிழமை விழுந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, பாண்டி செல்வத்தை அப்பகுதியினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
புதன்கிழமை பகலில் அப்பகுதியில் விழாவுக்கு பதாகை வைத்த சிலருக்கும், பாண்டிச்செல்வத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அவர் மின்கம்பியில் விழுந்து காயமடைந்து உயிரிழந்தது குறித்து செல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






