அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

விநாயகர் சதுர்த்தி: பூஜைப் பொருள்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் பூஜைப் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் கடைகளில் புதன்கிழமை மாலை அலைமோதியது. 

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் பூஜைப் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் கடைகளில் புதன்கிழமை மாலை அலைமோதியது. 
 நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள முக்குருணி விநாயகருக்கு 18 படி அரிசியில் கொழுக்கட்டை தயார் செய்து, வியாழக்கிழமை காலை படையல் செய்யப்படுகிறது. நகரில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.
 பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் சிறிய சிலைகளை வைத்து பூஜை செய்வது வழக்கம். அதற்காக மதுரையில் ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட் பகுதி, மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி, காளவாசல், தல்லாகுளம், யானைக்கல் உள்ளிட்ட இடங்களில் களிமண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இச்சிலைகள் ரூ.10 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
 மேலும், விநாயகருக்கு பிடித்தமான எருக்கம்பூ மாலை, அருகம்பூ மாலை மற்றும் அவல், பொறிக்கடலை, கொய்யா, பேரிக்காய் பழங்கள், வாழை இலைகள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பூஜைக்கான பூக்கள் அதிகம் விற்பனையானதால் அவற்றின் விலையும் அதிகமாக இருந்தது. மல்லிகை, முல்லை உள்ளிட்டவை மட்டுமின்றி கனகாம்பரம், கதம்ப பூக்களால் ஆன மாலையும் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.
 மதுரையில் மேலமாசி வீதி ஆலாலய விநாயகர் கோயில், ரயில்வே காலனி விநாயகர், புதூர் மற்றும் சாய் நகர் சித்தி விநாயகர் என அனைத்துக் கோயில்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிறப்பு சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.