தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு    

திருமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 8:05 am IST

திருமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
 திருமங்கலம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த செளந்திரபாண்டியன் மனைவி ரமணி(55). இவர் விருதுநகரில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மீண்டும் திருமங்கலம் வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது ராஜாஜி சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ரமணி கழுத்தில் அணிந்திருந்த  5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.