திருமங்கலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பத்மநாபன். இவர் கள்ளிக்குடி பகுதியில் பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பத்மநாபன் முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் பத்மநாபன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








