/

சிண்டிகேட் வங்கிப் பணியாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்

மதுரை மண்டல சிண்டிகேட் வங்கி பணியாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:38 am IST

மதுரை மண்டல சிண்டிகேட் வங்கி பணியாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரை சிண்டிகேட் வங்கி  செயல் இயக்குநர் எஸ்.கிருஷ்ணன் பேசியது: 
வங்கியின் மூலதனத்தை உயர்த்த 300 மில்லியன் பங்குகள் வங்கி பணியாளர்களுக்கு வழங்கப்படும். ஞானசேவா திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கும் பெண் தொழில் முனைவோருக்கும் ரூ.10 லட்சம் கடன் உதவி அளிக்கப்படும். கட்டடத்துறை, சுரங்கம் மற்றும் சுரங்கம் சார்ந்த இயந்திரங்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை வழங்கப்படும். வங்கி வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வங்கியின் நடவடிக்கைகள், கடன் தொகையை வசூலித்தல் போன்றவற்றை கண்காணிக்க குழு அமைத்து தீவிரக் கண்காணிப்பு செய்யப்படும் என்றார். 
இதில் வங்கி பணியாளர்களுக்கு நவீன வளர்ச்சிகள் பற்றியும், வங்கியின் குறிக்கோளை அடையும் வழிமுறைகள், தரமான சேவை அளித்தல் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.