மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் சனிக்கிழமை (ஜன. 26) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குடியரசுத் தினத்தன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். ஊராட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள், நலத் திட்டங்கள், தனிநபர் பயன்பெறும் திட்டங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், அரசால் தெரிவிக்கப்படும் முக்கிய விஷயங்கள் குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதிக்கப்படும்.
ஒவ்வொரு கிராமத்தின் அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலை, அதில் சரிசெய்ய வேண்டியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
எனவே, அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினர்கள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


