தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

 விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையைப் பெற

Updated On :24 ஜனவரி 2019, 2:44 am IST

மதுரை மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் க.ராஜா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த 2018 மே 1 ஆம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமலும், மத்திய-மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறாதவராகவும் இருப்பது அவசியம். 
முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத் திட்டத்தில் ஓய்வூதியம் பெற இயலாது.  தகுதியுடையவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n)  பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.