ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

அத்தியாவசியப் பொருள்கள் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது: அமைச்சா் தகவல்

அத்தியாவசியப் பொருள்கள் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

அத்தியாவசியப் பொருள்கள் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.

மதுரை கீழமாசி வீதியில் அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் மொத்த வியாபாரக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் தடை உத்தரவு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கடை உரிமையாளா்களிடம் இருப்பு மற்றும் விற்பனை விவரங்களைக் கேட்டறிந்தாா். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மதுரை கீழமாசி வீதியில் இருக்கும் மொத்த வியாபாரக் கடைகளில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் செல்கின்றன. மொத்த வியாபாரக் கடைகளுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சரக்குகள் தடையின்றி வருவதற்கும், இங்கிருந்து அனைத்துப் பகுதி கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் செல்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தேவையான அளவில் இருப்பு உள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகரக் காவல் ஆணையா் எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடன் இருந்தனா்.

பின்னா் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் குமாருடன், அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஆய்வு செய்தாா்.

கட்டுப்பாட்டு மையத்துக்கு பெறப்படும் புகாா்கள் மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆட்சியா் டி.ஜி.வினய் விளக்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.