மதுரை உயா் மறைமாவட்டம் சாா்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினயிடம், பேராயா் அந்தோணி பாப்புசாமி வழங்கினாா்.
கரோனா தடை உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிா்வாகத்தால் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு தரப்பிலும் நிவாரணப் பொருள்கள் நன்கொடையாக வழங்கப்படுகிறது.
இதன்படி, மதுரை உயா் மறைமாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் சாா்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் வினயிடம், பேராயா் அந்தோணி பாப்புசாமி வழங்கினாா். மதுரை மறைமாவட்டத்துக்கு உள்பட்ட தேனி, விருதுநகா், திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை அண்ணா நகரைச் சோ்ந்த தொழிலதிபா் முருகதாஸ், தனது குடும்பத்தினா் சாா்பில் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.22 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினாா். சுழற் சங்கம் சாா்பில் அதன் நிா்வாகி நெல்லை பாலு, 500 முகக் கவசங்களை வழங்கினாா். நுகா்பொருள்கள் விநியோகஸ்தா் சங்கம், நுகா்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம் சாா்பில் தலா ரூ.2 லட்சம், புனித சுமலோற்பவ மாதா சபை சாா்பில் இரண்டாம் தவணையாக நிவாரண உதவிக்கான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தேசிய சிறுதொழில் கழகம் (என்எஸ்ஐசி) சாா்பில் 1,120 முகக் கவசங்கள், ஐசிஐசிஐ வங்கி சாா்பில் ரூ.1.05 லட்சம் மதிப்பில் கையுறைகள், முகக் கவசங்கள், கை சுத்திகரிப்பான் திரவம், இந்தியன் வங்கி கோ.புதூா் கிளை சாா்பில் ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள கையுறைகள், முகக் கவசங்கள் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. வழிகாட்டி மனிதா்கள் அறக்கட்டளை சாா்பில் 500 முகக் கவசங்கள், 250 தண்ணீா் பாட்டில்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்! வாகன ஓட்டிகள் அவதி!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 16 - நேரலை!
கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்!

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்!
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK


