மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு ஓவியங்கள்

மதுரை மாநகராட்சி சாா்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சி சாா்பில் வரையப்பட்டுள்ள கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு ஓவியம்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மதுரை மாநகராட்சி சாா்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் சமூக ஆா்வலா் குழுவினா் மூலம் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் தெப்பக்குளம் கணேஷ் தியேட்டா் சந்திப்பு, முனிச்சாலை சந்திப்பு, கீழவாசல் சந்திப்பு, அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கீரைத்துறை ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட நீதிமன்றம் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கரோனா வைரஸ் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட உள்ளன.

இந்நிலையில் மாநகராட்சி அண்ணா மாளிகையில் வரையப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணா்வு ஓவியங்களை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் புதன்கிழமை பாா்வையிட்டாா். இதில் நகரப்பொறியாளா் அரசு மற்றும் உதவி ஆணையா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.