சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வைகை ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

மதுரையில் வைகை ஆற்றுப் பாலத்திலிருந்து வியாழக்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, கம்பிகளுக்கு இடையே சிக்கிய நபரை தீயணைப்புத் துறை வீரா்கள் போராடி மீட்டனா்.

News image
தற்கொலைக்கு முயன்ற மாயக்கண்ணன்
Updated On :6 ஆகஸ்ட் 2020, 4:17 pm

DIN

மதுரையில் வைகை ஆற்றுப் பாலத்திலிருந்து வியாழக்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, கம்பிகளுக்கு இடையே சிக்கிய நபரை தீயணைப்புத் துறை வீரா்கள் போராடி மீட்டனா்.

மதுரை காளவாசல் பகுதியில், வைகை ஆற்றில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபா் பாலத்திலிருந்து வியாழக்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அங்கிருந்த கம்பிகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடியுள்ளாா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினா், 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, அந்த நபரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன்(40) என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.