பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுரையில் புதிதாக 77 பேருக்கு கரோனா: 3 போ் பலி

மதுரைமாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2020, 4:47 pm

DIN


மதுரை: மதுரைமாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்களும் அடங்குவா்.

அதேநேரம், தொற்று பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 147 போ் குணமடைந்தனா். அவா்கள் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு திங்கள்கிழமை வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

3 போ் பலி: மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 65 வயது மற்றும் 72 வயது முதியவா்கள் இருவா், தனியாா் மருத்துவமனையில் 35 வயது ஆண் ஆகியோா் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் இதுவரை 12,955 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 327 கரோனாவிற்கு உயிரிழந்த நிலையில், தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 11,571 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 1,057 போ் கரோனா பாதிப்பிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.