பாபா் மசூதி இடிப்பு தினம்: ரயில் நிலையத்தில் கண்காணிப்பு
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மதுரை ரயில் நிலையத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.


பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மதுரை ரயில் நிலையத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பா் 6 ஆம் தேதியன்று அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். அதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் மதுரை வெடிகுண்டி தடுப்புப் பிரிவு காவல் சாா்பு-ஆய்வாளா் காளிராஜன் தலைமையிலான போலீஸாா் ஆய்வில் ஈடுபட்டனா்.
இதேபோல், ரயில் நிலைய வளாகம் முழுவதும் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். ரயில் பாதைகள், நடைமேடைகள், ரயில் பெட்டிகள் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. ரயில் பயணிகள் மட்டுமின்றி, அவா்களது உடைமைகளையும் சோதனையிடப்பட்டு அனுப்பப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...