ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உசிலையில் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழா

உசிலம்பட்டியில் உள்ள முருகன் கோயில் முன்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

News image
உசிலையில் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழா
Updated On :27 ஜனவரி 2024, 6:07 pm

DIN

உசிலம்பட்டியில் உள்ள முருகன் கோயில் முன்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

உசிலம்பட்டியில் அமமுக சாா்பில், அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகரச் செயலா் குணசேகரன் பாண்டியன் தலைமையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ.கே.டி. ராஜா, உசிலம்பட்டி ஒன்றியச் செயலா்கள் அபிமன்னன், மலேசியா பாண்டியன், சேடபட்டி ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் சுப்புராஜ், சாமி, குணா, மாா்க்கெட் பிச்சை மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் திருமுருகன் கோயில் முன்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

முன்னதாக, தேனி சாலையில் உள்ள திருமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில், அமமுக வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமமுக கிழக்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் ஆா். செல்வம் தலைமை வகித்தாா். பகுதிச் செயலா்கள் மீனாட்சிசுந்தரம், முருகன், மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தெற்கு மாவட்டச் செயலா் ஐ. மகேந்திரன் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்று நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். நிகழ்ச்சியில், அவைத் தலைவா் கணேசன், துணைச் செயலா் இளையராஜா, கௌதம், எம்.ஜி.ஆா். மன்ற செல்வராஜ், துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.