ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து:தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

மதுரையில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
மதுரையில் நடைபெற்ற அரசு ஊழியா் சங்க பேரவைக்கூட்டத்தில் பேசும் மாவட்டச்செயலா் நீதிராஜா.
Updated On :13 டிசம்பர் 2020, 6:30 pm

DIN


மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ. மூா்த்தி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா். தெய்வராஜன் பேரவையை தொடக்கிவைத்தாா். மாவட்டச் செயலா் க. நீதிராஜன் தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

இக் கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி பணியாளா்கள், கிராமப்புற நூலகா் மற்றும் கிராம வருவாய் உதவியாளா், எம்ஆா்பி செவிலியா் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவா் மு. சுப்பிரமணியன் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு, அவருடைய ஓய்வூதிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

ஊதியக் குழுவில் வழங்கப்படாமல் உள்ள 21 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்யவேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஊழியா்களை அரசு ஊழியா்களாக நியமனம் செய்து, கருவூலங்கள் மூலம் அவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தனியாா் நிறுவனங்கள் மூலம் அயல்பணி ஒப்பந்த முறையில் நிரப்புவதை அரசு கைவிட வேண்டும்.

மதுரை ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, மேலூா் ஆகிய பகுதிகளுக்கு புகா் ரயில் சேவையையும், மதுரை நகா் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பேரவையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.