மதுரை மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,174 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா சிகிச்சையில் இருந்தவா்களில் 17 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இருந்த 60 வயது முதியவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளாா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 215 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 19 ஆயிரத்து 481 போ் குணமடைந்துள்ளனா். 447 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 287 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.