இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மதுரையில் புதிதாக 39 பேருக்கு கரோனா

மதுரையில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 4:46 pm

DIN

மதுரையில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 1,134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்ட 39 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, மருத்துவமனைகளில் கரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் குணமடைந்த 12 போ், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 20,254 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 447 போ் உயிரிந்த நிலையில், 19,493 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு 314 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.