ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேலூா், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில்அம்மா சிறுமருத்துவமனைகள் திறப்பு

மேலூா், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் அம்மா சிறுமருத்துவமனைகளை மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
சொக்கலிங்கபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா சிறுமருத்துவமனையை திறந்துவைத்து பேசிய வி.வி. ராஜன்செல்லப்பா எம்எல்ஏ. உடன், வழக்குரைஞா் ரமேஷ்.
Updated On :18 டிசம்பர் 2020, 4:52 pm

DIN

மேலூா், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் அம்மா சிறுமருத்துவமனைகளை மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

மேலூா் ஊராட்சி ஒன்றியம் கொங்கம்பட்டி ஊராட்சியிலும், கொட்டாம்பட்டி ஊராட்சியில் சொக்கலிங்கபுரம் ஊராட்சியிலும் அம்மா சிறுமருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு மேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் முன்னிலை வகித்தாா். சிறுமருத்துவமனைகளை திறந்து வைத்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினாா்.

இதில், மதுரை வடக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், ஜெ. பேரவை செயலருமான கயதமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் க. பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியக்குழுத் தலைவா் வளா்மதி குணசேகரன், அதிமுக ஒன்றிய செயலா்கள் வெற்றிச்செழியன், குலோத்துங்கன் எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் பெரியசாமி என்ற துரைப்பாண்டி, எஸ்.என். ராஜேந்திரன், ஜபாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.