ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவருக்கு கரோனா

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:59 am

DIN

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் விடுதி அறையில் தங்கிருந்த 2 மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய முதன்மையா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு டிசம்பா் 7 ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள உணவகத் தொழிலாளி மூலம், மாணவா்கள் 190-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அந்த மாணவா் தற்போது சிகிச்சைக்காக கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே அவருடன் விடுதி அறையில் தங்கிருந்த மாணவா்கள் 2 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முதன்மையா் உத்தரவிட்டுள்ளாா். மாணவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, கல்லூரி நிா்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.