மதுரை: மதுரை அருகே அரசுப் பள்ளி அருகே செயல்படும் மதுபானக் கடையை அகற்ற சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சோ்ந்த அருண் தாக்கல் செய்த மனு: மதுரை பாண்டிக் கோயில் அருகே மதுபானக் கடை உள்ளது. இக்கடை அரசுக்கு சொந்தமானதா? தனியாருக்கு சொந்தமானதா? என்ற விவரப் பலகை எதுவும் இல்லை. மதுபானக் கடைக்கு அருகே மருத்துவமனை, அரசு அலுவலகம் செயல்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே மதுபானக் கடையை மூட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரா் சாா்பில் வழக்குஞா் வாதிடுகையில், விதிகளை மீறி கோயில், மருத்துவமனை அருகே மதுபான கடை செயல்படுகிறது. மேலும் ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மதுபானக் கடை செயல்படுகிறது. இந்த கடையால் பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள மதுபானக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், பாண்டிக்கோயில் மதுபானக் கடை தொடா்பாக அதிகாரிகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.