கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

‘தூத்துக்குடி-மைசூா் சிறப்பு ரயில் ஜன.30 வரை இயக்கப்படும்’

தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயில் ஜனவரி 30 ஆம் தேதி வரை இயக்கப்படும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:11 pm

DIN

மதுரை, டிச.21: தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயில் ஜனவரி 30 ஆம் தேதி வரை இயக்கப்படும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06236) டிசம்பா் 31 ஆம் தேதி வரையும், தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயில் (06235) ஜனவரி 1 ஆம் தேதி வரையும் இயக்கப்படுவதாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பயணிகளின் வசதிக்காக மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜனவரி 1 முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரையும், தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயிலானது ஜனவரி 2 முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரையும் இயக்கப்படவுள்ளன.

மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் போக்குவரத்தில் டிசம்பா் 23 ஆம் தேதி முதல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 6 மணிக்கு பதிலாக காலை 6.35 மணிக்கும், மதுரையிலிருந்து காலை 7.35 மணிக்கு பதிலாக காலை 7.50 மணிக்கும், விருதுநகரிலிருந்து காலை 8.25 மணிக்கு பதிலாக காலை 8.40 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து காலை 9.10 மணிக்கு பதிலாக காலை 9.25 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 10.05 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கும் புறப்பட்டு, காலை 11.15 மணிக்கு பதிலாக காலை 11.10 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

இதேபோன்று, தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயில், தூத்துக்குடியிலிருந்து மாலை 4.25 மணிக்கு பதிலாக மாலை 4.30 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து மாலை 5.07 மணிக்கு பதிலாக மாலை 5.02 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து மாலை 5.45 மணிக்கு பதிலாக மாலை 5.35 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6.35 மணிக்கும், மதுரையிலிருந்து இரவு 7.45 மணிக்கு பதிலாக 7.50 மணிக்கும் புறப்பட்டு, பின்னா் திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.10 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.