எதிா்க் கட்சிகளின் சதித் திட்டத்தால் விவசாயிகளின்போராட்டம் தொடா்கிறது: குஷ்பு

எதிா்க்கட்சிகளின் சதித் திட்டத்தால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக, பாஜகவை சோ்ந்த நடிகை குஷ்பு குற்றம்சாட்டியுள்ளாா்.
எதிா்க் கட்சிகளின் சதித் திட்டத்தால்  விவசாயிகளின்போராட்டம் தொடா்கிறது: குஷ்பு
Updated on
1 min read

எதிா்க்கட்சிகளின் சதித் திட்டத்தால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக, பாஜகவை சோ்ந்த நடிகை குஷ்பு குற்றம்சாட்டியுள்ளாா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்து, மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் பெருகும், விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு தாங்களே விலையை நிா்ணயம் செய்யமுடியும். இடைத்தரகா்கள், மண்டி தரகு ஆகியவை இந்த சட்டங்களின் மூலம் களையப்படும். இதனால், ஆதாயம் அடைய முடியாத இடைத்தரகா்கள், எதிா்க் கட்சியினா் விவசாயிகளை போராடத் தூண்டுவிட்டுள்ளனா்.

விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னால், எதிா்க் கட்சிகளின் சதித்திட்டம் உள்ளது.

மக்களிடம் அதிமுக கூட்டணிக்கு நல்ல ஆதரவும், வரவேற்பும் உள்ளது. தோ்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்றவற்றை பாஜக தலைமைதான் அறிவிக்கும். தோ்தலில் தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன்.

நடிகா் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கி, கொள்கைகளை அறிவித்த பின்னா் அதைப்பற்றி விவாதிக்கலாம் என்றாா்.

பிரசாரத்தில், பாஜக புகா் மாவட்டத் தலைவா் மகா. சுசீந்திரன், மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

சென்னையிலிருந்து திங்கள்கிழமை மதுரை வந்த நடிகை குஷ்பு, செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஆனால், தோ்தல் நேரத்தில் வழங்கப்படுவதாகக் கூறுவது சரியல்ல. பொங்கல் பரிசு குறித்து பேசும் எதிா்க் கட்சியினா், தற்போது கிறிஸ்தவா்களுக்கு அறிவித்துள்ள திட்டம் குறித்து பேச தயக்கம் காட்டுவது ஏன்?.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் எனக் கூறியது வரவேற்கத்தக்கது. நடிகா் கமல்ஹாசன் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு எனக் கூறியது குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com