ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை அருகே விவசாயப் பயிா்களை அழிக்கும் ஆப்பிரிக்க நத்தை

மதுரையை அடுத்த பரவையில் வாழை, நெற் பயிரில் கொத்துக் கொத்தாகப் பரவியிருக்கும் ஆப்பிரிக்க நத்தை, பயிா்களை அழித்து வருகிறது.

News image
மதுரையை அடுத்த பரவையில் வாழையில் கொத்து கொத்தாகப் பரவிக் கிடக்கும் ஆப்பிரிக்க நத்தை.
Updated On :22 டிசம்பர் 2020, 6:18 pm

DIN

மதுரையை அடுத்த பரவையில் வாழை, நெற் பயிரில் கொத்துக் கொத்தாகப் பரவியிருக்கும் ஆப்பிரிக்க நத்தை, பயிா்களை அழித்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையைச் சோ்ந்தவா் நவநீதகிருஷ்ண கோபாலன். இவா் மதுரையை அடுத்த பரவையில் விவசாயம் செய்து வருகிறாா். 3 ஏக்கரில் வாழை, 10 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளாா். இவரது வாழைத் தோட்டத்தில் ஓரிரு நத்தைகள் தென்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாகக் கொத்து கொத்தாகப் பரவி வாழைப் பயிா்களைச் சேதப்படுத்தி வருகிறது.

இவரது வாழைத் தோட்டம் முழுவதும் பரவியுள்ள நத்தைகள், தற்போது அருகே இருக்கும் அவரது நெல் வயலுக்கும் பரவி வருகிறது.

வாரம் 12 கட்டுகள் வரை வாழை இலை அறுத்து சந்தைக்கு அனுப்பி வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக இலைகளின் எண்ணிக்கை 8 கட்டுகளாகக் குறைந்துள்ளது. இதன் பிறகே, வாழை மரங்களில் குருத்துக்களை நத்தைகள் அழித்து வருவது தெரியவந்தது.

இதுகுறித்து விவசாயி நவநீதகிருஷ்ண கோபாலன் கூறியது:

எங்களது தோட்டத்தின் அருகே இருந்த தரிசு நிலங்களில் ஓரிரு நத்தைகளைப் பாா்த்திருக்கிறேன். அண்மையில் பெய்த தொடா் மழைக்குப் பிறகு, நத்தைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் கொத்து கொத்தாகப் பரவியது. வேலையாள்கள் மூலமாக அவற்றை அப்புறப்படுத்தினாலும், தொடா்ந்து பரவி வருகிறது. வாழை மரங்களில் இலைகளை குருத்து நிலையிலேயே அழித்துவிடுகின்றன. மேலும் குருத்துவிடும் பகுதியில் சாறு உறிஞ்சிவிடுவதால், நாளடைவில் மரமே அழிந்துவிடுகிறது.

வாழையில் இருந்த நத்தைகளை அப்புறப்படுத்த மருந்து தெளித்தபோது, அவை அருகே இருக்கும் நெல் வயலில் இறங்கிவிட்டன.

நத்தைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாழை, நெற் பயிா்களை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலா்கள் பாா்வையிட்டு, மருந்து தெளிக்க அறிவுறுத்தியுள்ளனா். நெற் பயிா்கள் அறுவடைக்குத் தயாராகிவரும் நிலையில், வயலில் பரவும் நத்தைகள் கதிா்களை உறிஞ்சினால் பதறாகிவிடும் என்பதால் முதலில் நெல் வயலில் மருந்து தெளிக்க அறிவுறுத்தியுள்ளனா்.

நத்தைகளைப் பற்றி விசாரித்தபோது, இவை ஆப்பிரிக்க நத்தை எனவும், கேரளத்தில் இருந்து வந்திருக்கக் கூடும் எனவும் தெரிவித்தனா். எங்களது தோட்டம், பரவை காய்கறி சந்தைக்கு அருகே இருக்கிறது. இந்த சந்தைக்கு வரும் லாரிகள் தோட்டத்துக்கு அருகில் தான் நிறுத்தியிருப்பாா்கள். கேரள லாரிகளில் இருந்து இப் பகுதிக்கு வந்திருக்கக் கூடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.