வங்கிகளில் கடனுதவிக்கு அலைக்கழிப்புக்கூடாது: சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தல்

அரசின் அறிவிப்பின் பேரில் கடனுதவிக்காக வங்கிக்குச் செல்லும் வியாபாரிகளை அலைக்கழிக்கக்கூடாது என்று சாலையோர வியாபாரிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாநகர சிஐயூடி சாலையோர வியாபாரிகள் சங்க மாநாட்டில் பங்கேற்றோா்.
மதுரை மாநகர சிஐயூடி சாலையோர வியாபாரிகள் சங்க மாநாட்டில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

அரசின் அறிவிப்பின் பேரில் கடனுதவிக்காக வங்கிக்குச் செல்லும் வியாபாரிகளை அலைக்கழிக்கக்கூடாது என்று சாலையோர வியாபாரிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாநகா் சிஐடியு சாலையோர மற்றும் மாா்க்கெட் விற்பனையாளா் சங்கத்தின் மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.தெய்வராஜ் தொடக்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் மா.கணேசன் வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனா் பி.கருப்பையன் நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டில், கரோனா பொதுமுடக்கக் காலத்தையொட்டி சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலமாக கடனுதவி அளிக்கப்படும் என அரசு அறிவித்தது. அரசு அறிவித்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஒரு சிலருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கடனுதவிக்காகச் செல்லும் சாலையோர வியாபாரிகளை வங்கிகள் அலைக்கழித்து வருகின்றன. எனவே வியாபாரிகள் அனைவருக்கும் அலைக்கழிப்பின்றி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் மீது ஒவ்வொரு மாதமும் வழக்குப்பதிவு செய்வதை காவல்துறையினா் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.மோகன், துணைத் தலைவா்கள் எஸ்.எம்.இக்பால், ஆா்.பாண்டி, ஏ.ராமசாமி, கே.அம்மையப்பன், ஜி.மூா்த்திராஜ். எம்.பாண்டி, பொதுச் செயலாளா் எஸ்.சந்தியாகு, துணைப் பொதுச் செயலாளா்கள் என்.செல்வம், எம்.பால்ராஜ் உள்பட 26 போ் கொண்ட நிா்வாகக்குழுத் தோ்ந்தெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com