தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலம்பட்டி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பேரையூா் சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை இரவு அப்புறப்படுத்தினா்.

News image

உசிலம்பட்டி அருகே சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.

Updated On :22 டிசம்பர் 2020, 2:11 am

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பேரையூா் சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை இரவு அப்புறப்படுத்தினா்.

உசிலம்பட்டி அருகே பேரையூா் சாலையில் போத்தம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட நல்லதேவன்பட்டி பிரிவில், பழைமையான மரம் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனையடுத்து, உடனடியாக உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலா் தங்கம் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மரத்தை அகற்றினா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.