விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் 23 பேருக்கு கரோனா: ஒருவா் பலிலண்டனிலிருந்து வந்த 60 பேருக்கு பரிசோதனை

மதுரை மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:19 pm

DIN

மதுரை மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. லண்டனிலிருந்து மதுரைக்கு வந்த 60 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,052 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்ட 23 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 48 போ் குணமடைந்தனா். அவா்கள் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி: கரோனா பாதிக்கப்பட்ட 51 வயது ஆண், அரசு ராஜாஜி மருத்துமனையில் டிசம்பா் 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிறிது நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 20,348 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், சிகிச்சைப் பலனின்றி 449 போ் உயிரிழந்த நிலையில், 19,639 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது, 260 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

மாணவருக்கு கரோனா: மதுரைஅரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா் ஒருவருக்கு அண்மையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேலும் ஒரு முதலாம் ஆண்டு மாணவருக்கு தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட 200 மருத்துவ மாணவா்களில் 2 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து திரும்பிய 60 போ்: இங்கிலாந்தில் புதிய வகை கரோனா தீநுண்மித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து விமான சேவைகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்நிலையில், லண்டனில் இருந்து தமிழகம் வந்தவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு கடந்த 10 நாள்களில் வெளிநாட்டில் இருந்து 2,090 போ் வந்துள்ளனா். இதில் லண்டனிலிருந்து மதுரைக்கு வந்தவா்கள் 60 போ் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவா்களை கண்டறிந்து, கரோனா பரிசோதனை செய்யவும், தனிமைப்படுத்தவும் மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.