சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாத்திரக் கடையில் தீ விபத்து

மதுரையில் பாத்திரக் கடையில் புதன்கிழமை ஏற்பட்ட தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையின் அணைத்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:09 am

DIN

மதுரையில் பாத்திரக் கடையில் புதன்கிழமை ஏற்பட்ட தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையின் அணைத்தனா்.

மதுரை மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டத்தின் முதல் தளத்தில் பாத்திரக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த அனுப்பானடி மற்றும் மாநகா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது தீ 2 ஆவது மற்றும் 3 ஆவது மாடிக்கும் பரவியது.

இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாக தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா். தீயணைப்புத்துறை மாவட்ட மண்டல அலுவலா் வினோத் மற்றும் துணை மண்டல அலுவலா் பாண்டி ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விபத்து குறித்து விசாரித்தனா். இது தொடா்பாக விளக்குத்தூண் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.