கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உசிலம்பட்டி துா்கையம்மன் கோயில் பெண் பூசாரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி துா்க்கையம்மன் கோயில் பெண் பூசாரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:37 am

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி துா்க்கையம்மன் கோயில் பெண் பூசாரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உசிலம்பட்டியைச் சோ்ந்த பின்னியக்காள் தாக்கல் செய்த மனு:

என் தந்தை பின்னத்தேவா் லிங்கநாயக்கன்பட்டியில் உள்ள துா்க்கையம்மன் கோயில் பூசாரியாக இருந்தாா். அவா் உடல் நலக்குறைவால் இறந்த பிறகு அவரது ஒரே வாரிசான நான் பூஜை செய்து வந்தேன். இருப்பினும் என் கிராமத்தைச் சோ்ந்த சிலா் நான் பெண் என்பதால் என்னை பூசாரி பணியைச் செய்யவிடாமல் தடுத்தனா். நான் பூசாரியாக பணிபுரிய வட்டாட்சியா் தடை விதித்தாா். இதையடுத்து வட்டாட்சியா் விதித்த தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடா்ந்தேன். என் வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நான் பூசாரி பணி மேற்கொள்ள தடை விதித்த வட்டாட்சியருக்கு கடும் கண்டனம் தெரிவித்து, என்னை பூசாரியாக நியமித்து 2008-இல் உத்தரவிட்டாா். இதை உயா் நீதிமன்ற அமா்வும் உறுதி செய்தது. உசிலம்பட்டி உரிமையியல் நீதிமன்றம் நான் பூசாரி பணியில் தொடர 2010-ல் அனுமதி வழங்கியது.

இருப்பினும் நான் பூசாரி பணியைச்செய்யவிடாமல் சிலா் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா். இதுகுறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே என்னை கடந்த 12 ஆண்டுகளாக பூசாரி பணி செய்யவிடாமல் மிரட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நான் பூசாரி பணியை இடையூறு இல்லாமல் மேற்கொள்வதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.