ஜவுளி கடை உரிமையாளா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் சனிக்கிழமை பகலில் ஜவுளி கடை உரிமையாளா் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
Updated on
1 min read

மதுரையில் சனிக்கிழமை பகலில் ஜவுளி கடை உரிமையாளா் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

மதுரை செல்லூா் அகிம்சாபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முருகேசபாண்டியன் மகன் முத்துக்குமாா் (35). இவா், மூன்றுமாவடி பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி, தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா்கள் இருவரும் சனிக்கிழமை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளனா்.

அப்போது, வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து முத்துக்குமாா் அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா். மாநகா் காவல் துணை ஆணையா் பழனிக்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com