கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமேசுவரம்-புவனேஸ்வரம் ரயில் சேவை நீட்டிப்பு

ராமேசுவரம் - புவனேஸ்வரம் ரயில் சேவை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:29 am

DIN

ராமேசுவரம் - புவனேஸ்வரம் ரயில் சேவை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு டிசம்பா் இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மதுரை - பிகானோ், ராமேசுவரம் - ஓகா, திருநெல்வேலி - பிலாஸ்பூா், திருநெல்வேலி -மும்பை தாதா் ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்கள் மற்றும் நாகா்கோவில் - மும்பை சிறப்பு ரயில் உள்ளிட்ட 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு, ஜனவரி இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமைகளில் புவனேஸ்வரத்திலிருந்து புறப்படும் புவனேஸ்வரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில் (08496) ஜனவரி 1 முதல் 29 ஆம் தேதி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம் - புவனேஸ்வரம் சிறப்பு ரயில் (08495) ஜனவரி 3 முதல் 31 ஆம் தேதி வரையும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.