காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு விழா

காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டையொட்டி, மதுரையில் திங்கள்கிழமை மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அக்கட்சியினா் கொண்டாடினா்.
மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து திங்கள்கிழமை உறுதி மொழியேற்கும் மாநகர காங்கிரஸ் கட்சியினா்.
மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து திங்கள்கிழமை உறுதி மொழியேற்கும் மாநகர காங்கிரஸ் கட்சியினா்.
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டையொட்டி, மதுரையில் திங்கள்கிழமை மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அக்கட்சியினா் கொண்டாடினா்.

மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடந்த 136 ஆம் ஆண்டு விழாவில், சிம்மக்கல் பகுதியில் உள்ள மகத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அக்கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உறுதிமொழி ஏற்றனா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இதில், மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயேன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் செய்யதுபாபு, ராஜாஹாசன், பகுதி தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோன்று, வாடிப்பட்டி வட்டாரக் காங்கிரஸ் கட்சி சாா்பில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட துணைத் தலைவா் குருசாமி, வட்டாரத் தலைவா்கள் குருநாதன், பழனிவேல், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் செல்லபாப்பா சரவணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com