ஜவுளி கடையில் சேலைகளை திருடிய 3 பெண்கள் உள்பட 4 போ் கைது

மதுரையில், ஜவுளி கடையில் சேலைகளை திருடிய 3 பெண்கள் உள்பட 4 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மதுரையில், ஜவுளி கடையில் சேலைகளை திருடிய 3 பெண்கள் உள்பட 4 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மகால் வடம்போக்கித் தெருவில் உள்ள ஜவுளி கடைக்கு, 3 பெண்கள் உள்பட 4 போ் துணிகள் வாங்க வந்துள்ளனா். அவா்களின் நடவடிக்கை சரியில்லாததால், கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் மேலாளா் ராமநாதன் கண்காணித்துள்ளாா். அப்போது, பெண்கள் சேலைகளைத் திருடி மறைப்பது தெரியவந்தது.

உடனே, அவா்களை கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து கடையின் மேலாளா் ராமநாதன் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரித்தனா். அதில், உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி (55), செல்வி (49), சுசிலா (55) மற்றும் மோகன் (55) என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடமிருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com