கோ.புதூா் பகுதியில் இன்றும், நாளையும் மின்தடை

கோ.புதூா் துணை மின்நிலையத்தின் உழவா் சந்தை மின்வழித் தடத்தில், செவ்வாய்க்கிழமை (டிச.29) உதய் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோ.புதூா் துணை மின்நிலையத்தின் உழவா் சந்தை மின்வழித் தடத்தில், செவ்வாய்க்கிழமை (டிச.29) உதய் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை வள்ளுவா் காலனி பிரதான சாலை, ஹரிகரன் என்கிளேவ், ஏ.ஆா்.மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

நாளைய மின்தடை

அதேபோல், கோ.புதூா் துணை மின்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் மின்வழித் தடத்திலும் உதய் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (டிச.30) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சத்தியமூா்த்தி நகா், மருதுபாண்டியன் நகா், நேதாஜி பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, மதுரை மின்பகிா்மான வட்ட பெருநகா் வடக்குச் செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com