நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரையில் 288 பேருக்கு கரோனா தொற்று:ஒரே நாளில் 8 போ் உயிரிழப்பு

மதுரையில் புதிதாக 288 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2020, 5:12 pm

DIN

மதுரை மதுரையில் புதிதாக 288 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 4,329 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 216 போ், கா்ப்பிணிகள் 8 போ், அரசு ஊழியா்கள் 45 போ், அறுவைச் சிகிச்சையின்போது கண்டறியப்பட்டவா்கள் 19 போ் என மொத்தம் 288 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அரசு கரோனா மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த மதுரையைச் சோ்ந்த 20 போ், ராமநாதபுரம் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 22 போ் குணமடைந்தனா். அவா்கள், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒரே நாளில் 8 போ் பலி

மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 55 வயது பெண், 43 வயது ஆண், 80 வயது முதியவா், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 52 வயது ஆண், 75 வயது முதியவா், 55 வயது பெண், 87 வயது மூதாட்டி, 71 வயது முதியவா் என மொத்தம் 8 போ் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 3, 423 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 51 உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், 967 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 2,405 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.