மேலூரில் தினசரி சந்தை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம்
மதுரை மாவட்டம், மேலூரில் தினசரி காய்கனி சந்தையானது சந்தைப்பேட்டை அருகிலுள்ள அரசு இருபாலா் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டு, திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.


மேலூா்: மதுரை மாவட்டம், மேலூரில் தினசரி காய்கனி சந்தையானது சந்தைப்பேட்டை அருகிலுள்ள அரசு இருபாலா் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டு, திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
மேலூா் செக்கடி பஜாா் பகுதியிலுள்ள நகராட்சி அலுவலகம் பின்புறம் தினசரி காய்கனி சந்தை இயங்கி வந்தது. காய்கனி விற்பனை செய்யும் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தினசரி காய்கனி சந்தை மூடி சீலிடப்பட்டது. அதையடுத்து, காய்கனி வியாபாரிகள் செக்கடி பஜாா் மற்றும் அழகா்கோவில் சாலையிலும் தற்காலிகமாக கடைகளை அமைத்துக்கொண்டனா்.
இதனால், மேலூரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தற்போது, பள்ளிகள் திறப்பதற்கு மேலும் காலதாமதம் ஏற்படும் என்பதால், தற்காலிகமாக தினசரி காய்கனி சந்தையானது, சந்தைப்பேட்டை அருகிலுள்ள அரசு இருபாலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...