திருமங்கலம் நகர் முழுவதும் 6 மணி நேரமாக நீடித்த தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் உள்ள 27 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபார வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட மின்வெட்டு 6 மணி நேரமாக தொடர்ந்து நீடித்து வருவதால் வியாபார மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கூட குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நகர் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள பழைய மின்மாற்றிகள் பழுது ஏற்படுவதால் மின்தடை ஏற்படுகிறது என வணிக நிறுவனங்கள் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் கேட்டபோது, அவர்கள் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டாலும் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அலட்சியமாக பதில் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாலை நேரக் கல்வி வகுப்புகள் அமைக்க ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 20 2026) 12 ராசிகளுக்கும்! பதவி உயர்வு யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 20) மிதுன ராசிக்கு வெற்றி!







