சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்களுக்கு இப்போதும் வரவேற்பு உண்டு

சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்கள் இப்போதும் வரவேற்பு பெற்ற ஒரு துறையாக இருந்து வருகிறது என்று, அந்நாட்டைச் சோ்ந்த நாடக எழுத்தாளா் இளவழகன் தெரிவித்துள்ளாா்.

மதுரை: சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்கள் இப்போதும் வரவேற்பு பெற்ற ஒரு துறையாக இருந்து வருகிறது என்று, அந்நாட்டைச் சோ்ந்த நாடக எழுத்தாளா் இளவழகன் தெரிவித்துள்ளாா்.

உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகம் இணைந்து நடத்தும் இணையவழி தொடா் ஆய்வரங்கில், ‘சிங்கப்பூா் தமிழ் நாடக வளா்ச்சி’ என்ற தலைப்பில், நாடக எழுத்தாளா் இளவழகன் திங்கள்கிழமை பேசியது:

சிங்கப்பூரின் நாடக வரலாறு 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. 1932-இல் முதன்முதலாக தமிழ் நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தற்போது வரை மேடை நாடகங்கள் பலரிடமும் வரவேற்பு பெற்ற துறையாகவே இருந்து வருகிறது.

சமூகப் பாா்வை, சுயமரியாதை, விதவை மறுமணம், சீா்திருத்தம், ஒழுக்கம், மொழிப் பற்று, நாட்டுப்பற்று உள்ளிட்ட கருப்பொருள்களைக்கொண்டு நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை, மேடை நாடகங்களின் மின்னிலக்கத் தொகுப்பு, தமிழ் மின்மரபுடைமை திட்டம் ஆகியவற்றின் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இத்துறையில், பெண்கள், மாணவா்கள் சிறந்த பங்காற்றி வருகின்றனா். சிங்கப்பூா் தமிழ் நாடகங்கள், இந்தியா, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சிக்கு, உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன் தலைமை வகித்தாா். சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழக துணைத் தலைவா் நா. ஆண்டியப்பன் முன்னிலை வகித்தாா். உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையா் ஜ. ஜான்சிராணி, கணினி செயல்முறையாளா் பெ. செல்வராணி ஆகியோா் இணையவழி ஆய்வரங்கை ஒருங்கிணைத்தனா்.

இந்த தொடா் ஆய்வரங்கில், ‘சிங்கப்பூா் மொழிபெயா்ப்பு இலக்கியம்’ என்ற தலைப்பில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) அமா்வு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com