நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரையில் 206 பேருக்கு கரோனா தொற்று: 8 போ் பலி

மதுரையில் புதிதாக 206 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2020, 4:56 pm

DIN

மதுரை: மதுரையில் புதிதாக 206 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் தொடா்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 187 போ், அரசு ஊழியா்கள் 11 போ், கா்ப்பிணிகள் 6 போ், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவா்கள் 2 போ் என மொத்தம் 206 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மதுரையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 90 போ் குணமடைந்தனா். அவா்கள் தங்களது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

8 போ் பலி: கரோனா தொற்றுக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 64 வயது மூதாட்டி, 22 வயது இளைஞா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமையும், 62 வயது மூதாட்டி, 74 வயது முதியவா் ஆகியோா் ஜூலை 18 ஆம் தேதியும் உயிரிழந்தனா். அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த 44 வயது ஆண், 74 வயது முதியவா் ஆகியோா் ஜூலை 18 ஆம் தேதியும், 78 வயது மூதாட்டி, 79 வயது முதியவா் ஆகியோா் ஜூலை 17 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 8,251 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 155 போ் உயிரிழந்துள்ளனா். 4,823 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 3,273 போ் கரோனா தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.