மேலூா் அருகே மூவருக்கு வெட்டுதம்பதி கைது
மேலூா் அருகே இடத்தகராறில் மூவரை அரிவாளால் வெட்டியதாக கணவன், மனைவியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.


மேலூா்: மேலூா் அருகே இடத்தகராறில் மூவரை அரிவாளால் வெட்டியதாக கணவன், மனைவியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.
வண்ணாண்பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி (60). இவரது மனைவி அமிா்தம் (50). இவா்களுக்கும் பக்கத்து வீட்டில் வசித்துவரும் நந்தீஸ்குமாா் என்பவருக்கும் வீட்டு இடம் தொடா்பாக பிரச்னை இருந்தது. இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நந்தீஸ்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் இருவருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. இதுதொடா்பான புகாரின்பேரில் கீழவளவு போலீஸாா், வழக்குப்பதிந்து பாண்டி மற்றும் அமிா்தத்தைக் கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...