டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில் புறப்பட்டது

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை-விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் 281 பயணிகளுடன் திங்கள்கிழமை புறப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:43 pm

DIN

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை-விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் 281 பயணிகளுடன் திங்கள்கிழமை புறப்பட்டது.

தமிழகத்தில் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 70 நாள்களாக விரைவு மற்றும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை 7 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை-விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் 281 பயணிகளுடன் புறப்பட்டது. 

முன்னதாக அனைத்து ரயில் பயணிகளும் முகக்கவசங்கள் அணிந்துள்ளனரா என உறுதிசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ரயில் பயணச்சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே ரயில் நிலையத்தினுள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு வரிசையாக ரயில் பெட்டியில் ஏறி அவரவர் இருக்கையில் அமரவைக்கப்பட்டனர்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனால் மதுரை ரயில் நிலையம் வந்த பயணிகள் குழப்பதற்கு ஆளானார்கள். ஆனால் அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள், பயணிகள் குழப்பமடைய வேண்டாம் எனக் கூறி அனைவரையும் பயணிக்க அனுமதித்தனர்.

Story image

மொத்தம் 450 பேர் பயணம்: இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி. அரியலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்றது. இதில் மொத்தம் 450 பயணிகள் பயணித்தனர். காலை 7 மணிக்கு மதுரையில் புறப்பட்ட ரயில் பகல் 12 மணிக்கு விழுப்புரம் சென்றடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.